மார்க்கெர் பேனா மூலம் போதைப்பொருள் கடத்தல்

மார்க்கெர் பேனாவில் போதைப் பொருளைப் பதுக்கி வெளி நாடுகளுக்குக் கடத்த முயன்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச மலேசிய சுங்கத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின் வழி இவர் கைதானார்.
அவரிடமிருந்து 64,560 வெள்ளி மதிப்புடைய 1.6 கிலோகிராம் எடையிலான மெத்தாம் பெத்தாமின் வகையிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
35 வயதுடைய அந்த வெளிநாட்டு ஆடவர், அன்றைய தினத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல் கடித பட்டுவாடா சேவை மையத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை துணை இயக்குநர் டத்தோ ஜொஹாரி அலிஃபியா தெரிவித்தார்.
’கைப்பற்றப்பட்ட மார்க்கெர் பேனா அடங்கிய பெட்டியை சோதனையிடுகையில் மெத்தாம் பெத்தாமின் வகையிலான போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதேவேளையில், சந்தேகம் ஏற்படாதவாறு அப்பெட்டியில் இருந்த பல்வேறு வண்ணத்திலான மார்க்கெர் பேனாவில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அடுத்தகட்ட விசாரணைக்கு உதவும்பொருட்டு கைது செய்யப்பட்ட அவ்வாடவர் கடந்த 24ஆம் தேதி முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + thirteen =