மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை
கீர்த்திமைப் பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண்;
போது அரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீர்
ஆடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!


பொருள்: நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here