மாமன்னர் அன்வாரைச் சந்திப்பார்


  மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசியல் கட்சித்தலைவர்களை சந்திக்கப்போவதாக நேற்று முதல் செய்தி வைரலாகப் பரவத் தொடங்கியது. நேற்று மாமன்னர் பிறந்த நாளாக இருந்த வேளையில், இச்செய்தி புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

  இதில் முக்கியமாக நாளை மாமன்னர் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
  நாடாளுமன்றத்தில் இருதரப்பின ரும், அதாவது நடப்பு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில் மாமன்னர் அதற்கு ஒரு முடிவைச் செய்ய முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
  இதற்கு தீர்வு காணும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக நியமித்து அதன் பின்னர் அவர் பெரும் பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிகிறது.
  ஏற்கெனவே டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அம்னோ நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி உள்ளனர்.
  பிகேஆர், அமானா, மூடா, பெஜுவாங் ஆகிய கட்சிகள் இதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ அழைப்பும் கிடைக்க வில்லை என்று மலேசியா கினி தெரிவித்துள்ளது.
  அமானா தலைவர் முகமட் சாபு அடுத்த சில நாட்களில் சாதகமான முடிவு கிடைக்கும் என கோடிகாட்டி யுள்ளார்.
  பெஜுவாங் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் கைருடின் அபு ஹசான், மாமன்னர் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த இசைந்துள்ளதாகக் கூறினார்.
  கடந்த ஒரு மாதமாக மாமன்ன ருடன் சந்திப்பு தொடர்பாக பேச்சு நடைபெற்றுவருவதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மலேசியா கினியிடம் தெரிவித்துள்ளார்.
  இதன்படி முஹிடினின் எதிர்கால ஆட்சி கேள்விக் குறியாக இருக்கும் என தெரிகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  4 × 3 =