மாபுல் தீவில் ரிசோர்ட் தங்குமிடம் தீயில் அழிந்தது

0

சபாவுக்கு அருகில் இருக்கும் மாபுல் தீவில், மாபுல் டைவ் லோட்ஜின் 8 தங்குமிட அறைகளும் பணியாளர்களின் குடியிருப்புகளும் தீயில் அழிந்தன.
நேற்று முன்தினம் மாலை 5.35 மணிக்கு நேர்ந்த அந்தத் தீ விபத்தில் கடை, சிற்றுண்டிச்சாலை, மது விற்கும் பகுதி, மின்சார இயந்திரம், குளிர்சாதன அறை மற்றும் அருகில் இருந்த வீடுகள் யாவும் முற்றாக அழிந்தன.
தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், காற்று பலமாக வீசியதோடு கடல் கொந்தளிப்பினால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடலோர காவல் படையினரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.அந்த சம்பவத்தில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 3 =