மாநில மனிதவள இலாகாவின் 97 விழுக்காடு புகார்களுக்குத் தீர்வு

மலாக்கா மாநில மனிதவள இலாகாவில் கடந்த 10 மாதங்களாகக் கிடைக்கப்பெற்ற 289 புகார்களில் 97 விழுக்காடு அதாவது 283 புகார்களுக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக அதன் தலைவர் ரோஸ்லி ஜந்தான் தெரிவித்தார்.


அதில் பெரும்பாலான புகார்கள் பணியாளர்கள் வேலைக்குத் தாமதமாக வருதலும் மாதாமாதம் சரியாக சம்பளம் கொடுக்காததுமே ஆகும். எந்தெந்த நிறுவனங்கள் மேற்கண்ட இரு தவறுகளைச் செய்துள்ளனவோ அந்த நிறுவனகளுக்கு மாநில மனிதவள இலாகா எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதே வேளையில், எந்தெந்த நிறுவனங்கள் தொழிலாளர் நலன் மீது அக்கறை காட்ட மறுக்கிறதோ அந்தந்த நிறுவனங்கள் மனிதவள இலாகாவின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


அண்மைக் காலமாக மலாக்கா மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் மன உளைச்சலுக்கும் நிதி நெருக்கடிக்கும் ஆளாகி யிருப்பதாகக் கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள 1,489 தொழில் நிறுவனங்கள் மீது மாநில மனிதவள இலாகா சோதனை மேற்கொண்டதாக ரோஸ்லி ஜந்தான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 6 =