மாநில அரசு அலுவலகத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள்

0

பேரா அரசாங்கத்தின் பணிமனையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அமர்த்தப்படுவர். அவர்கள் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க, பணியாளர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டுவார்கள் என மாநில மந்திரி பெசார், டத்தோஸ்ரீ அமாட் பைசால் அசுமு தெரிவித்தார்.

இது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், லத்தீபா கோயா என்னிடம் பேசினார். ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்று அதிகாரிகள் அமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார். உண்மையைச் சொல்லப் போனால், இது மாநில அரசாங்கத்தின் அலுவலகத்திற்கு தேவையான ஒன்றாகும்.

ஏனென்றால், பேரா அரசாங்க பணியாளர்களின் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்துவதற்கு ஊழலற்ற போக்கு மிகவும் முக்கியம். அதனை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் வேண்டும். அவர்கள் இந்த அலுவலகத்திலேயே அமர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது.

நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும் ஊழலற்ற அரசாங்கம் தான் தேவை. அந்த அடிப்படையில் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு நாங்களும் ஒத்துழைப்பு நல்குவோம் என்றார் அவர். இதனிடையே, செய்தியாளரிடம் பேசிய லத்தீபா கோயா, ஓர் ஊழல் சம்பவம் நடைபெறுவதற்கு முன் அதனை தடுப்பது தான் சரியான தீர்வு. ஆதலால், மாநில அரசாங்க அலுவலகத்தில் எங்கள் ஆணையத்தின் அதிகாரிகள் கடமையைச் செய்வார்கள்.

ஏற்கெனவே சபா, கெடா ஆகிய மாநிலங்களில் எங்களுடைய அதிகாரிகள் செயல்பட தொடங்கி விட்டனர். ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அனைத்து மாநிலங்களிலும் தொடரும் என்றும் அவர் மேலும் உறுதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here