மாநிலங்களுக்கிடையிலான பயணத்தடை மே17 வரை நீட்டிப்பு


    மாநிலங்களுக்கிடையிலான பயணத்தடை, எம்சிஓ, சிஎம்சிஓ வரும் மே 17ஆம் தேதி வரை நீடிக்கும் என தேசியப் பாதுகாப்பு மன்றம் முடிவு செய்துள்ளது. கிளந்தான், சரவாக், சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்தத் தடை அமலில் இருக்கும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

    இதன் காரணமாக ஹரிராயா கொண்டாட்டங்களின் போது மக்கள் பயணம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
    ஹரிராயா கொண்டாட் டத்தின் முதல்நாள் மே 13ஆம் தேதி என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்சிக்கான எம்சிஓ மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களிலும் மாநிலங்களுக் கிடையே பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெர்லிஸ், கெடா, பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான், திரெங்கானு, புத்ராஜெயா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இருப்பினும் தடை செய்யப்பட்ட மாநிலங்களில் மாவட்டங்களுக்கிடையிலான பயணத் தடை அனுமதிக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    1 × five =