மாண்பில் சிகரம் பண்பில் அகரம்… இன்று டான்ஸ்ரீ சுப்ராவின் பிறந்தநாள்..!

ம.இ.கா. அரசியல் வரலாற்றில் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் என்ற அரசியல் முத்து மறைந்த பெருந்தலைவர் துன் சம்பந்தனால் அரசியலுக்கு கைப்பிடித்து அழைத்து வரப்பட்டவர். பின்னர் டான்ஸ்ரீ வெ.மாணிக்காவின் எழுச்சி மிக்க அரசியலில் மின்னிய தலைவர். மலாயா பல்கலைக்கழகத்தில் ‘இரண்டாவது உலகப் போருக் குப் பிந்திய இந்தியர்கள் என்ற ஆய்வினை ’ சிறப்பாக மேற்கொண் டவர். அதனால் முதுநிலை பட்டம் பெற்றவர் சுப்ரா மட்டுமே.
பாட்டாளியின் புதல்வர்
பேரா மாநில சிலிம் ரிவர் லீமா பிளாஸ் எனும் ரப்பர் தோட்டத்தில் பிறந்தவர். அங்குள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டுவரை தாய்மொழியைக் கற்றவர். பின்பு சிலிம் ரிவர் இடைநிலைப் பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை பயின்றவர். அவருடைய பள்ளிக்காலத்தில், சிலிம் ரிவருக்கு சைக்கிள் மூலம் பயணித்தவர். தம் படிப்பில் மிகவும் கவனம் செலுத்திப் படித்தனால் வெற்றியும் கண்டார்.
அதன் பின்னர் எஸ்.டி.பி.எம். கல்வியை கிள்ளானில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அவ்வாண்டு சோதனையில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த தேர்ச்சி அடைந்தார். இவருடைய கல்விக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆதரவு வழங்கியது.

மகனுக்குக் கிடைத்த மரியாதை

அப்போது லீமா பிளாஸ் தோட்டத் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தவர் பெரியதம்பி ஆவார். மேலும், சுப்ராவின் தந்தை அப்போது லீமா பிளாஸ் தோட்டத்தில், பெரிய கங்காணி பொறுப்பில் இருந்தார். தொழிலாளர்கள் அனைவரும் பெரியவர் சின்னையாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அந்த அளவுக்கு தோட்ட மக்களை அவர் வழி நடத்தியுள்ளார்.
தந்தையைப் போன்றே மக்களிடம் சுப்ரா அன்பாகப் பழகி வந்தார்.
எஸ்.டி.பி.எம். முடித்த சுப்ரா, மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பிரிவில் சேரும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். அந்நிலையில்,
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பி.பி.என். எனும் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி தம் நான்கு ஆண்டு இளங் கலைப் படிப்பை முடித்த பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
அப்போதுதான் அமரர் துன் சம்பந்தன் அவரை அழைத்து வந்து ம இகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராகப் பொறுப்பில் அமர்த்தினார். அன்றைய இளம் பட்டதாரியாக மஇகா பொறுப்பில் அமர்ந்த சுப்ரா கட்சியின் அமைப்பின் நிலையை சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, நேர்படுத்தி, நெறிப்படுத்திய தலை வராவார். அவர் காலத்தில்தான் மஇகாவுக்கு என்று ஒரு கட்டமைப்பு உருவானது. டான்ஸ்ரீ மாணிக்கா தலைமையில்

துன் சம்பந்தனுக்கும் அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்துக்கும் இடையில் தலைமைத்துவப் பூசல் ஏற்பட்டு அரசாங்கத்தின் தலையீட்டில் தலைமைத்துவ மாறுதல் ஏற்பட்டபோது கட்சியின் தலைவர் பொறுப்பை டான்ஸ்ரீ மாணிக்காவிடம் ஒப் படைத்துவிட்டு துன் சம்பந்தன் பதவி விலகினார். மாணிக்கா தலைமைப் பதவிக்கு வந்தவுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சுப்ராவிடம் ஒப்படைத்தார். அந்த நேரத்தில் மறைந்த அமரர் டத்தோ
பத்மா, டத்தோ சுப்ரா என்ற இரு வரும் இளைய தலைவர்கள் மஇகா வுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவர் என்ற நம்பிக்கை பிறந்தது. ஒரு புன்னகையால் எதையும் வெல்லும் பண்புடன் விளங்கிய டத்தோ சுப்ராவுக்கு அரசியல் அனுபவம் இல்லை, அடிமட்ட ஆதரவும் இல்லை. அலங்காரத் தலைவர் அவர் என்றெல்லாம் குறைகூறினர்.
டான்ஸ்ரீ மாணிக்கா மறைவுக்குப்பிறகு 1981 இல் துன் (டத்தோஸ்ரீ) சாமிவேலு தலைவரானார்.

அரசியல் மாண்பும் பண்பும்

பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணை அமைச்சராகவும் இருந்து மக்க ளுக்கு சேவையாற்றி வந்துள்ளார். சுப்ராவின் அரசியல் மாண்பு, பண்பில் அகரமாக இருந்ததால் முன்னாள், இந்நாள் பிரதமர் துன் மகாதீருக்கு அன்றே மிகவும் நெருக்கமாக இருந்தார் சுப்ரா.
கடந்த 2004 பொதுத் தேர்தலுக்கு 3 நாள்களே இருக்கும் நிலையில், அவருக்கு நாடாளுமன்றத் தொகுதி இல்லை என அறிவித்தனர்.
இது நாடெங்கும் உள்ள உண்மையான ம.இ.கா. விசுவாசிகளுக்கு சினத்தை உண்டு பண்ணியது. சுப்ரா இல்லாத ம.இ.கா.வுக்கு இனி சோதனையே என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கவிவாணர் பார்வையில்

டாக்டர் இரா.தண்டாயுதத்தின் மாணவர் சுப்ரா, அமிழ் தான பேச்சாளர், அறம்தெரிந்த செயலாளன், அனைவரிலும் திருத்தமானவன், கவிவாணன் உலகநாதன் கவிதையில், உண்மைக்கு விருத்தமானவன் சுப்ரா. நாட்டையும், சமுதாயத்தையும் வழி நடத்தி உயர்த்தும் தலை வர்களையே மனுக்குலத்தின் விண்மீன்கள் என்று சுப்ராவை இரா.தண்டாயுதம் வாழ்த்திய அந்த வரிகள் வேறு யாருக்கும் கிடைக்குமோ…?

1 COMMENT

  1. மக்கள் ஓசையில் பணி புரிந்த காலங்களில், மலாக்காவில் வாசகர் வசந்தம் விழாவை மிக.விமரிசையுடன் ஏற்பாடு செய்தேன். தொடர்ந்து 3 ஆண்டுகள் இவ்விழா கொண்டாடப்பட்டது. இவ்வேளை , புன்னகை அழகன் டான் ஸ்ரீ சுப்ராவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிட்டியது. நல்ல மரியாதைக்குரிய மனிதர், வழிக்காட்டும் தலைவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 8 =