மாணவர்கள் ஏமாற்றம்?ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் மீது எம்ஏசிசி விசாரணை?

1
Tamilmalar news (Published on 30th July 2019)

கோலாலம்பூர், ஆக. 22-
இந்திய மாணவர்களை கல்வியில் கை தூக்கி விடுவதாகக் கூறி செயல்பட்டு வரும் ஓர் அரசு சார்பற்ற இந்திய கல்வி இயக்கம் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளைத் தவறாகக் கையாண்டதாகக் கூறி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. எனினும் அந்தக் கல்வி நிறுவனம் எது என்பது தெரியவில்லை ஆனால் நாட்டின் பிரபலமான கல்வி நிலையமான ஸ்ரீமுருகன் கல்வி நிலையமாக அது இருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது. ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்துக்கு எதிராக அண்மைக் காலமாக ஏராளமான புகார்கள் எழுந்தன. வலைத்தளங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு அமர்க்களப்பட்டது. செய்தித் தாள்களிலும் இந்தச் செய்தி வெளிவந்திருந்தது.
மொத்தம் 66.8 மில்லியன் வெள்ளியை அந்த கல்வி நிலையம் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையர் லத்திபா கோயாவுக்கு நேரடியாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடப்பதாகக் கூறப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தில் இருந்து அந்நிலையம் நிதி பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. தமது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கடந்த ஜூலை 17ஆம் தேதி லத்திபா கோயாவுக்கு இக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
’மாணவர் மேம்பாட்டுத் திட்டம் என்று பெயர் கூறப்பட்ட திட்டம் தொடர்பில் அனைத்து 45 பள்ளிகளின் தலைவர்களையும் அழைத்து இதற்காகப் பெறப்பட்ட பணம் என்ன ஆனது என்பதை விசாரிக்குமாறு அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் அந்த கல்வி நிலையத்தின் இயக்குனர், ஆலோசகரின் 10 நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் அவர் கோரியிருக்கிறார். இதே கடிதம் பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். சட்டத்துறைத் தலைவர், தலைமை நீதிபதி, ஐஜிபி ஆகியோருக்கு அனுப்பபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தைக் கேட்டபோது எம்ஏசிசி இன்னும் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அப்படி அணுகினால் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

1 COMMENT

  1. பொதுப் பணத்தை கொள்ளையடிக்கும் எல்லா திருட்டு கும்பல்களும் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும். சுயநல சுண்டெலிகள் அழிக்கப் பட வேண்டும், விட்டால் மற்ற எலிகளும் சுறண்ட ஆரம்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 4 =