மாட் ரெம்பிட் சட்ட விரோத பந்தய கும்பல் கைது

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை யில் சட்ட விரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட நான்கு இளம் வயதுடைய ஆடவர்களை போலீஸ் வளைத்து பிடித்தது
பொது மக்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் கொடுத்து வரும் இவர்களின் செயலை பல நாட்களாக கண்காணித்து வந்த ‘ஸ்குவாட் 42’ போக்கு வரத்து போலீஸ் சிறப்பு பிரிவு நேற்று விடியற்காலை 1.00 மணிக்கு அவர்களை கைது செய்தது.
18 வயது முதல் 20 வயதுடைய இவர்கள் ஓப்ஸ் சம்சேங் போலீஸ் வேட்டையில் சிக்கினர்.
இத்துடன் நடந்த பல்வேறு சோதனையில் ஸ்குவாட் 42 பிரிவு குழுவினர் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், முறையாக பி ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனம் ஓட்டியவர்கள், வாகனங்களை அனுமதி யின்றி அழகுபடுத்திய குற்றம், கண்ணாடிகள் மற்றும் காப்புறுதி யில்லாமல் இருந்த வாகனங்களுக்கும் சம்மன் கொடுக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரி, இஷாகி லிஹின் போஹ்யாமின் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − four =