மாட் சாபு மகனுக்கு 8 மாதச்சிறை

0

போதைப்பொருள் பயன்படுத் திய குற்றத்திற்காக தற்காப்பு முன்னாள் அமைச்சர் முகமட் சாபுவின் மகனுக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட அமாட் சைபுல் இஸ்லாம் முன்கூட்டியே குற்றத்தை ஒப்புக் கொண்டிருந் தால், தண்டனை குறைக்கப்பட்டி ருக்கும் என மாஜிஸ்திரேட் முகமட் ஐஸாட் அப்துல் ரஹிம் தமது தீர்ப்பில் கூறினார். சைபுல் நேற்று முதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேல் முறையீட்டு விசாரணை வரை சிறைத் தண்டனையை ஒத்திவைக்கும்படி வழக்கறிஞர் நஸார் கான் செய்த விண்ணப் பத்தை மாஜிஸ்திரேட் நிராகரித்தார். கடந்தாண்டு ஜனவரியில் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் போதைப் பொருள் உட்கொண்டதற்காக சைபுல் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 18 =