மாட் சாபுவின் உதவியாளரை எம்ஏசிசி கைது செய்தது

முன்னாள் தற்காப்பு அமைச்சரும் அமானா தலைவருமான மாட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்தது.
நேற்று முன்தினம் இரவு மாட் சாபுவின் உதவியாளர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் மலேசியா கினியிடம் உறுதிப்படுத்தின.
இருப்பினும் இது குறித்து முழு விவரங்களைத் தர அந்த தகவல்கள் மறுத்து விட்டன.
தமது திவால் அந்தஸ்திற்கு தீர்வு காண பல தரப்பினரிடம் இருந்து 8 லட்சம் வெள்ளிக்கு மேல் அந்த உதவியாளர் வாங்கியதாக வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த 2018இல் எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியது.
நேற்று காலை தலைநகரில் உள்ள அமானா தலைமையகத்திற்கு அந்த உதவியாளரை எம்ஏசிசி அதிகாரிகள் அழைத்து வந்ததாக மலேசியா கினி தெரிவித்தது.
இருப்பினும் அமானா தலைமையகத்தில் இருந்து எம்ஏசிசி அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் கைப்பற்றவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 16 =