மாட்டுக் கொட்டகையில் போதைப் பொருள் தயாரிப்பு

0

உலு சிலாங்கூர் புக்கிட் பெருந்தோங் மாட்டுக் கொட்டகை மற்றும் மீன்கள் வளர்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 11 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்தோனேசியா, இந்தியா, மியன்மாரைச் சேர்ந்த 10 ஆடவர்களும் உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். மாட்டுக் கொட்டகையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15.97 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 28.8 கிலோ கிராம் காஃபின் போதைப் பொருள் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். இவை அனைத்தும் கிட்டதட்ட 222,960 வெள்ளியாகும் என்று புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனர் டத்தோ முகமட் காலில் காடிர் முகமட் தெரிவித்தார். இக்கும்பல் பயன்படுத்திய 33,000 வெள்ளி மதிக்கத்தக்க மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 நபர்களில் நால்வர் குற்றவியல் காரணமாக ஏற்கெனவே சிறையில் இருந்தவர்கள். சிறையில் இருந்த போது அங்குள்ள கைதி ஒருவரிடமிருந்து போதைப் பொருள் தயாரிப்பை கற்றுக் கொண்டுள்ள அவ்வாடவன். சிறையிலிருந்து வெளியேறிய பின்பு கைவிடப்பட்ட மாட்டுக் கொட்டகையில் போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விசாரணைக்கு முன்னர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என கோம்பாக் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார் டத்தோ முகமட் காலில் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here