மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை!

0

பெண் ஒருவர் கற்பழிக்கப் பட்ட பின்னர், அந்தக் கயவனிடமிருந்து தப்பிக்க அடுக்ககத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தார்.

அது சம்பந்தமாக 22 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஸ்டேன்லி ஜொனாதன் ரிங்கிட் தெரிவித்தார்.

வேலையில்லாத சந்தேக நபர் ஜாலான் பலவானில் இருக்கும் அந்த அடுக்கத்தின் மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட 25 வயதான பெண், நபர் ஒருவரால் சென்ரல் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு புகார் அளித்தார்.

அந்தப் பெண்ணுக்கு உடலில் கீறல்களும் கால் விரவில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

கூச்சிங் போலீசாரால் தேடப்படும் அந்த நபர் சில மாதங்களுக்கு முன்னர் சிபுவுக்குத் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

சம்பவ தினத்தின் காலை 5மணிக்கு, அந்தப் பெண் கழிவறைக்குச் சென்று திரும்பியபோது, சந்தேக நபர் அவரை அறைக்கு இழுத்துச் சென்று தாக்கி, கட்டிப்போட்ட பின்னர், பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளான்.

அதன் பின்னர், சந்தேக நபர் பெண்ணின் கைப்பேசியையும் ரொக்கப் பணத்தையும் அபகரித்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − twelve =