மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தைப் பற்றிய தவறான தகவல்

கடந்த 23 அக்டோபர் 2021 அன்று பினாங்கு மாநிலத்தில் ஒரு செயற்குழு கூட்டம், தலைமையகத்திடமிருந்து எந்தத் தகவலோ, அனுமதியோ பெறாமல் நடைபெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் 27 அக்டோபர் 2021 அன்று தலைமையகத்திலிருந்து இதை கண்டித்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தின் நோக்கம், பினாங்கு மாநிலத்தின் நடவடிக்கைக் குழு மறுசீரமைக்கப்பட்டு இன்னும் பல திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இவற்றையும் மீறி, அவர்கள் 16 நவம்பர் 2021 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததை அறிந்து, அதே தினம் ஒரு கண்டனக் கடிதத்தையும் அனுப்பினோம். இருப்பினும் தலைமையகத்தின் கண்டனத்தையும் மீறி பினாங்கு மாநில நடவடிக்கை குழு அந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்தியது இந்த செய்தியாளர் சந்திப்பில் உண்மைக்குப் புறம்பாக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மாஜூ ஜெயாவின் நற்பெயரையும், முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் வண்ணம் ஒரு செய்தியை தமிழ் மலர் நாளிதழில் 21 நவம்பர் 2021 அன்று வெளியிட்டனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும். ஆகவே இவ்வாறு வெளியிடப்படும் தவறான, ஆதாரமற்ற செய்திகளைக் கூட்டுறவு உருப்பினர்களும், பொது மக்களும் நம்பாதிருப்பதே நலம். இதுபோன்ற தவறான செய்தி களைப் பரப்பும் மாஜூ ஜெயா உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடைவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் கௌரவச் செய லாளர் திரு. க. இரத்தினசிங்கம் திட்டவட்டமாக குறிப்பிட்டார். க. இரத்தினசிங்கம் கௌரவச் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =