மஹாவின் காப்பார் வட்டார அமைப்புக்கூட்டம்

காப்பார் வட்டார அமைப்புக்கூட்டம், காப்பார் லாடாங் ஜாலான் யாக்கோப் முனீஸ்வரர் ஆலயத்தில் குணாளன் தலைமையில் ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்றது.
மஹாவின் தேசிய உதவித் தலைவரும் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டத்தோ டாக்டர் சுபத்ரா தேவி அதிகாரப்பூர்வமாக இதனைத் தொடக்கி வைத்தார். தேசிய பேரவை சார்பில் மற்றோர் உதவித் தலைவரான இராமநாதன் சிறப்பு வருகை தந்து மஹாவின் கொள்கைகளையும் உறுப்பினர்கள் மட்டுமின்றி இந்து இளைஞர்கள் எவ்வாறு குறைந்த முதலீட்டை கொண்டு வியாபாரத் துறையில் ஈடுபடலாம் என்ற விவரங்களையும் எடுத்துக் கூறினார்.
உறுப்பினர்களுக்கு இது நல்ல வழிகாட்டலாக அமைந்திருந்தது.
டத்தோ டாக்டர் சுபத்ரா தேவி, சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 25 வட்டாரங்கள் 2020க்குள் அமைக்கப்படும் என்றார். நமது சமய வளர்ச்சிக்காக எல்லா வட்டாரங்களிலும் சமயப் பிரசார குழுக்கள் அமைத்து இந்துக்களின் இல்லங்களுக்குச்சென்று சனாதன தர்மத்தின் மேன்மை பற்றிய விளக்கங்கள் தருவதற்கும் சமய நெறியோடு வாழ்வதன் அவசியத்தை உணர்த்தவும் ஊக்குவிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =