மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம் தனது புதிய உறுப்பினர்களை நியமித்தது

மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (மேட்ரேட்) டத்தோ மஹ்மூத் அப்பாஸ் மற்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் இர்மோஹிசாம் இப்ராஹிம் ஆகியோரை அதன் வாரியத்தின் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளது. பிரைட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற மஹ்மூத், தற்போது ஹலால் மேம்பாட்டுக் கழகத்தின் (எச்.டி.சி) தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர்.
இதற்கிடையில், இர்மோஹிசாம் கோலாலம்பூரின் உலக வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். தற்போது வேளாண்மை மற்றும் உணவு கைத்தொழில் அமைச்சின் ஆலோசகராகவும், டெக்னோலாஜி மாரா பலகலைக்கழகத்தின் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தேசிய பலகலைக்கழகத்தில் கல்வி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
“மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக, இவர்களின் நியமனங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மலேசிய ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கும், குறிப்பாக இந்த சவாலான நேரத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்திற்கு இவர்கள் பெரும் உதவியாக இருப்பார்கள்” என்று மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் ஹலீம் முகமது நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 4 =