மலேசிய வர்த்தகர் சங்கம், மலேசிய தொழிலாளர் சங்கத்தின் சட்டத் திருத்தங்களை மனிதவள அமைச்சு வரவேற்றது

0

மலேசிய வர்த்தகர் சங்கக் காங்கிரசும் (எம்.டி.யு.சி), மலேசியத் தொழிலாளர் சங்கமும் (எம்.இ.எப்.) தத்தம் சட்டதிட்டங்களில் மேற்கொண்ட ஒரு திருத்தத்தை வரவேற்பதாக மனிதவள அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.


இந்த முத்தரப்புக்கும் கடந்த 11 நவம்பர் 2019ல் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் விளைவாக இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துலக தொழிற்துறை தர நிலைக்கு மலேசியத் தொழிற்துறையை உயர்த்தும் நோக்கில் இந்தத் திருத்தங்கள் அமைகின்றன.

இச்சந்திப்பில் அமைச்சின் துணைப் பொதுச் செயலாளர் கைர் ரஸ்மான் முகமது, வர்த்தகர் சங்கத்தின் சார்பில் டத்தோ அப்துல் ஹலிம், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அஸ்மான் ஹரோம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முத்தரப்பைத் தவிர தொழிற்துறை சார்ந்த ஏராளமான சங்கங்களும் தங்கள் ஒத்துழைப்பை நல்கின என்று அமைச்சர் குலசேகரன் கூறினார்.
இத்திருத்தங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தைகளில் தங்கள் தரப்பு எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாக குலசேகரன் கூறினார். இந்த சட்ட திருத்தங்களுக்கு அமைச்சு எம்டியுசி.க்கும், எம்.இ.எப்.க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

சரவாக் தொழிற்சங்கக் காங்கிரஸ், தொழிலாளர் நலன் விரும்பிகள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், யுனி-எம்எல்சி தலைவர் முகமது ஷாபி மாமால் ஆகிய தரப்புகள் வழங்கிய ஒத்துழைப்பையும் அமைச்சு பாராட்டியது. இந்தச் சந்திப்பு இன்னொரு தேதிக்கு ஒத்தி வைக்க எம்டியுசி.யும் எம்.இ.எப்.பும் கடந்த 5 நவம்பர் 2019ல் ஒரு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இச்சந்திப்பு 11 நவம்பர் 2019ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =