மலேசிய ரப்பர் வாரியத்தில் தலைவராக டாக்டர் தரோயா அல்வி நியமனம்

மலேசிய ரப்பர் வாரியம் இன்று தனது தலைவராக டாக்டர் தரோயா அல்வியை நியமிப்பதாக ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. மலேசிய ரப்பர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நூருல் இஸ்லாம் முகமது யூசோஃப் கூறுகையில், “இந்த நியமனம் மலேசிய ரப்பர் வாரியத்திற்கு மிக பெரிய மாற்றமாகும். ஏனெனில், இந்த வாரியம் நிறுவப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெண்ணால் வழிநடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்” என்றார். “மலேசிய ரப்பர் வாரியத்தின் நிர்வாக குழு தரோயாவுக்கு தனது அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும், அவரது பரந்த அனுபவத்தால், மலேசிய ரப்பர் வாரியத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். “மலேசிய ரப்பர் வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜா இத்ரிஸ் ராஜா கமருடின் மலேசிய ரப்பர் வாரியத்தில் மிகப் பெரிய ஒரு பங்களிப்பை செய்துள்ளார். மலேசிய ரப்பர் வாரியத்திற்கு வழங்கிய அவரின் பங்களிப்புக்கு குழு தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டது” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார். இதற்கிடையில், உள்ளூர் ரப்பர் தொழிலுக்காகவும் சர்வதேச அளவிலும் மலேசிய ரப்பர் வாரியத்தை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தரோயா தனது சிறந்த உறுதிப்பாட்டை வழங்குவார் என்று எதிர்ப்பார்ப்பதாக குழு மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =