எதிர்வரும் சபா சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியர் களின் ஆதரவை தேசிய முன்ன ணிக்கு திரட்ட உதவும் வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி சபாவில் தனது சிறகை விரித் துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர். எஸ். தனேந்திரன் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளாக தீபகற்ப மலேசியாவில் கால் பதித்து வெற்றிக் கண்டதைத் தொடர்ந்து சபாவில் கட்சி களம் காணும் நேரம் வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு சபா மக்கள் சக்தி கட்சியை தொடக்கி வைத்த பின் அவர் செய்தியாளர் களிடம் பேசினார்.
இதற்கு முன்னர் சபாவில் 2 டிவிஷன்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த டிவிஷன்கள் ஆக்ககரமாக செயல்படவில்லை என்றார் அவர்.
சபா மாநில மக்கள் சக்தி கட்சியின் தலைவராக டத்தோ ஏ. நாகராஜு நியமிக்கப்பட் டுள்ளார்.
டத்தோ நாகராஜு நீண்ட காலமாக மஇகாவில் இருந்து வந்துள்ளார். மஇகா மீது நம்பிக்கை இழந்ததைத் தொடர்ந்து தற்போது மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளதாக தனேந்திரன் தெரிவித்தார்.
தற்போது தாவாவ், சன்டா கான், லாகாட் டத்து, கோத்தா கினபாலு, பெனம்பாங், சிம்பாங் கர்ட் ஆகிய டிவிஷன்களில் மக்கள் சக்தி கட்சிக்கு 2,500 உறுப்பினர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் சபா சட்டமன்ற தேர்தலில் சபா மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணி வேட் பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் சக்தி கட்சியின் கொடியும் நியமன கடிதமும் டத்தோ நாகராஜுவிடம் வழங்கப்பட்டது.
இதனிடையே மஇகாவின் மீது நம்பிக்கை இழந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சியில் இணைய தமக்கு எண்ணம் இல்லை என டத்தோ நாக ராஜு தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தேசிய முன்னணியின் ஆதரவு கட்சியான மலேசிய மக்கள் சக்தி கட்சியில் தாம் இணைந்ததாக அவர் சொன் னார்.
இந்த நிகழ்சசியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி யின் உதவித் தலைவர் டத்தோ சரவணக்குமார் கட்சி யின் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர், இளைஞர் பிரிவுத் தலைவர் ஏ. மணிமாறன், நெகிரி செம்பிலான் மாநில உதவித் தலைவர் எம். மணி மாறன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.