மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா

0

இந்த நாட்டில் நாடாளுமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த வகையில் நாடாளுமன்றம் பல ஆக்கப்பூர்வமான உருமாற்றங்களை இந்நாட்டிற்குத் தந்திருக்கின்றது என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மலேசிய நாடாளுமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இக்கருத்தினை பதிவு செய்தார். மலேசிய நாடாளுமன்றம் முதன் முறையாகச் செயல்பட்டது துங்கு அப்துல் ரஹ்மான் மண்டபமாகும். அம்மண்டபமானது ’மெட்டிக் எனப்படும் மலேசிய சுற்றுலாத்துறை மையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
1962ஆம் ஆண்டு தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டபோது அதற்கு 1 கோடியே 80 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தமான இந்த நாடாளுமன்ற கட்டடத்தில்தான் பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளுக்கும் செயல் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
குறிப்பாக 1963ஆம் ஆண்டு மலேசியா உருவானது. இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான தொடக்கமும் அனுமதியும் இங்குதான் அரங்கேறியிருக்கின்றன. அந்த வகையில் மலேசிய நாடாளுமன்றம் ஜனநாயகம் என்ற அம்சத்தையும் நல்லாட்சியையும் வழங்கத் தவறியதில்லை.
அந்த 2 அம்சங்களின் நிறை வேற்றத்திலும் மலேசிய அரசாங்கம் வெற்றி கண்டிருக்கிறது. இவை யெல்லாம் இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றவைதான். மலேசியாவின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது என்பதையும் அவர் தமதுரையில் பதிவு செய்தார்.
மலேசிய நாடாளுமன்றத்தின் 60ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் துன் மகாதீர் – சித்தி ஹஸ்மா தம்பதியர், துணைப் பிரதமர் வான் அஸிஸா – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்பதியர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =