மலேசிய திராவிடர் கழக தம்போய் பண்டார் பாரு கிளையின் 47 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம்

மலேசிய திராவிடர் கழகத்தின் ஜொகூர் தம்போய் பண்டார் பாரு கிளையின் 47 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் இங்குள்ள தாமான் முன்ஷி இப்ராஹிம் சமூக மண்டபத்தில் நேற்று முன்தினம் 14/9/2020 திங்கள் கிழமை இரவு 7.30 மணிக்கு மிக சிறப்பாக நடைபெற்றது. மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பாரதி வருகை புரிந்து இந்நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார். தொடர்ந்து அவர் தமது உரையில் தந்தை பெரியார் மகிமை பற்றி விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யும் அங்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார் ராமகிருஷ்ணன். தம்போய் பண்டார் பாரு கிளையின் தலைவராக ராமகிருஷ்ணனும் பொருளாளராக டாக்டர் ராஜாராமும் மீண்டும் தேர்வு பெற்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 1 =