மலேசிய குடும்பத்தில் இருக்கும் எங்களுக்கு அரசின் மானியம் இல்லையா?

மலேசிய குடும்பத்தில் இருக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் மானியம் வழங்கப்படாதது ஏன் என்று நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளைத் தொடுத்து பிரதமர் துறையமைச்சர் மஸ்துரா யாஸிட்டை திக்குமுக்காட வைத்தனர். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடங்கி இருக்கும் ‘மலேசிய குடும்பம்’ எனும் கோட்பாட்டை நாடாளுமன்றத்தில் மஸ்துரா விளக்கிக் கொண்டிருக்கும்போது இடைமறித்த குபாங் பாசு பெஜுவாங் உறுப்பினர் அமிருடின் ஹம்ஸா, இதற்கு முன்னர் எல்லா எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசின் மானியம் சரி சமமாக வழங்கப்படும் என்று அறிவித்த பின்னர், தற்போது அது அரசுடன் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எம்பிக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மலேசிய குடும்பம் என்பது மக்களவையில் இருந்து தொடங்கப்பட வேண்டுமென்றும், நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எம்பிக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதில் நியாயம் இருக்க முடியாது என்றும் பொக்கோக் செனா பக்காத்தான் எம்பி மாபுஸ் ஒமார் சாடினார். அதற்குப் பதிலளித்த மஸ்துரா, இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், நாடாளுமன்ற உருமாற்றத்தில் எம்பிக்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 9 =