மலேசிய ஊடக மன்றத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

0

மலேசியா ஊடக மன்றத்தை (எம்.எம்.சி.) நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கையளவில் ஒத்துக் கொண்டது என்று என்று தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் எடின் சையஸ்லி ஸித் கூறினார். அடுத்த வாரம் எம்.எம். சியின் கட்டமைப்பு பற்றி விவாதிப்பதற்கு முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கப்போவதாக அவர் கூறினார்.

கொள்கையளவில் எம்.எம்.சியை நிறுவுவதற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதன் கட்டமைப்புப் பற்றி குறிப்பாக எதிர்வரும் முதல் கூட்டம் விவாதிக்கும். இது ஒரு நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.
நாட்டில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் எம்.எம்.சி. உறுதி செய்யும் என்று துணையமைச்சர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
அதற்குமுன் ‘பெஸ்டா போலா நோச்சா 2019’ என்ற நிகழ்வின்

மூடுவிழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு கோலபிலா மாவட்டத்திலுள்ள எம்பாங் பங்கோங்கில் நடைபெற்றது.
எம்.சி.சி. சுயமாக செயல்படும் ஓர் அமைப்பாகும். ஊடகத் துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் அத்துறையில் பணியாற்றுபவர்களிடையே உயர்ந்த தரத்தை உருவாக்கும் நோக்கத்தை எம்.சி.சி. கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் ஊடகங்களுக்குமிடையே ஏற்படும் சர்ச்சைகளை தீர்த்து வைக்கும் அமைப்பாகவும் எம்.எம்.சி. செயல்படும்.

இதற்கிடையே ஜொகூர், பகாங் மற்றும் மலாக்கா மாநிலங்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலவரங்களைப் பற்றி வலைத்தளங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வரும் நபர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என துணையமைச்சர் எச்சரித்தார்.
தவறான செய்திகளை பரப்புவதின் வழி பொதுமக்களிடையே பயத்தையும் கவலையையும் அவர்கள் உருவாக்குகின்றனர் என்று அவர் கூறினார்.
உண்மையான தகவல்களை அரசாங்க ஊடகங்களான ஆர்.டி.எம். மற்றும் பெர்னாமாவின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு துணையமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =