மலேசிய இந்தியர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் காசி யாத்திரை அரசாங்க மானியத்தில் 62 பேர் பயணமாகினர்

மலேசிய இந்தியர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் முயற்சியில் அரசாங்க மானியத்தில் காசிக்கு யாத்திரை செல்லும் 8ஆவது குழுவினர் நேற்று முன்தினம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் இந்த யாத்திரையில் பங்குபெற்ற 62 பேரை வழியனுப்பி வைத்தார்.
55 வயதுக்கு மேற்பட்டவர்களை காசி யாத்திரைக்கு அனுப்பும் முயற்சியை மலேசிய இந்திய ஒருங்கிணைப்பு இயக்கம் மேற்கொண்டது.
இத்திட்டம் மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் ஆதரவோடு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவர் இத்திட்டத்திற்கு மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியிருந்தார். அதன் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் மனிதவள அமைச்சராகப் பொறுப்பு வகித்த குலசேகரன் முயற்சியில் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடமிருந்து மானியம் கிடைக்கப்பெற்றது.
அந்த மானியத்தைக் கொண்டு இதுவரை ஏராளமான இந்தியர்களை காசி யாத்திரைக்கு வழியனுப்பி வைத்தோம் என்று கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.பி.சாமி தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திடமிருந்து பெற்ற மானியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பயணங்களில், இந்த யாத்திரையே இறுதிப் பயணமாக அமைகிறது.
இனி அடுத்து இந்த யாத்திரை எப்படி தொடரப்போகிறது என்று தெரியவில்லை என்றும் கே.பி.சாமி தெரிவித்தார்.இந்த நாடு சிறந்ததொரு தலைவரைப் பெற வேண்டும் என்ற வேண்டுதலையும் இந்த யாத்திரை பயணத்தில் முன்வைத்து வாருங்கள் என்று பயணமானவர்களிடம் கே.பி.சாமி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இ

ந்த காசி யாத்திரை பயணமானது ஒரு மிகச் சிறந்த பயணமாகும். இதனை ஏற்பாடு செய்திருந்த கே.பி.சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த யாத்திரையானது தடையின்றித் தொடரும். அதற்கு நிச்சயம் அரசாங்கம் உதவும்.
இந்தப் பயணத்தில் இடம்பெற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் உறவினர்களிடமும் பேசி அடுத்த பயனத்தில் இணையுங்கள் என்றும் ஓம்ஸ் தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − two =