மலேசியா சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகின்றது மாட்டா

0

மலேசியா சுற்றுலா துறையுடன் கைகோர்த்து மலேசியா சுற்றுலாப் பயண முகவர்கர்கள் சங்கம் (மாட்டா) வரும் 4 ஏப்ரல் முதல் 5 ஏப்ரல் 2020 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் “சுத்தி சுத்தி மலேசியா” எனும் நிகழ்வை நடத்தவுள்ளது.
மாட்டா முதல் முறையாக நமது மலேசியாவில் இயங்கி வரும் தங்கு விடுதி, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்தவே இந்த நிகழ்வை ஏற்படுத்தியதாக மாட்டாவின் மேற்பார்வை குழுவின் தலைவர் ரோக்கி கோ தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் 230க்கும் மேற்பட்ட சுற்றுலா பயண முகவர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மாநில சுற்றுலா அலுவலகங்கள் பங்கேற்கும் என்றார்.
அதில் சபா, மலாக்கா, சிலாங்கூர், கெடா, திரங்கானு, ஜொகூர் மற்றும் சரவாக் போன்ற மாநிலத்தின் சுற்றுலா அலுவலகம் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகைபுரியும் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் பல சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளதாக நேற்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
முதல் முறையாக மாட்டா மற்றும் மலேசிய கேளிக்கை பூங்கா சங்கம் ஒத்துழைப்புடன் மலேசியவில் கடந்த காலங்களில் சுற்றுப்பயணிகளை ஈர்த்த கேளிக்கை பூங்கா இம்முறை இந்த நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் உள்நாட்டு வணிக உறுப்பினர்கள் தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மலேசியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் மலேசியா நாட்டின் சுற்றுலாத் தலங்களை அனுபவிக்கவும் இது மிகப் பெரிய வாய்ப்பு என்றார்.
சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்க்க மாட்டா நடத்தும் இந்நிகழ்வில் மலேசிய ஏர்லைன்ஸ் கோத்தா கினபாலு, கூச்சிங், பினாங்கு மற்றும் ஜொகூர் சென்று வர 4 அதிர்ஷ்ட குலுக்கு டிக்கெட்டுகளும் வழங்கவுள்ளது.
அதோடு பொது மக்கள் ரிம 200 வரை பயண பற்றுச்சீட்டு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாட்டா முகநூலில் நடத்தப்படும் போட்டியின் மூலம் இந்த பயண பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். மேல் விபரங்களுக்கு மாட்டாவின் முகநூல் அகப்பக்கத்தில் வலம் வரலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =