மலேசியா – சிங்கப்பூர் எல்லை திறக்கப்பட வேண்டும்; வர்த்தகர்கள் கோரிக்கை

மலேசியா – சிங்கப்பூர் எல்லை விரைவில் திறக்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் மத்தியில் கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜொகூர் மக்கள் மட்டுமின்றி மலேசிய வர்த்தகர்களும் இந்த இரு நாட்டு எல்லைகளும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஜொகூர் மக்களின் நன்மை, பொருளாதார வளர்ச்சியைக் கருத்திக் கொண்டு இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஜொகூரைச் சேர்ந்த வர்த்தகர்கள் எல்லையைக் கடப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியிருப்பதாக மலேசிய தொழிற்சாலைகளின் உரிமையாளர் சம்மேளனத் தலைவர் சோ தியான் லாய் தெரிவித்தார்.ஜொகூரில் இருந்து தினசரி சிங்கப்பூருக்குச் சென்று வரும் 250,000 பேருக்கு எளிதான பயண வசதிகளை இருநாடுகளும் செய்துதர வேண்டும்.இப்போதைய நடைமுறையால் பலர் சிங்கப்பூரில் இருந்து திரும்ப முடியாமல் உள்ளனர். சிங்கப்பூருக்குச் செல்ல முடியாத காரணத்தால் மலேசியர்களும் வேலையிழந்துள்ளனர்.
இரு நாட்டு மக்களும் கட்டுப்பாடின்றி எல்லை கடந்த பயணங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஜொகூர் சுற்றுலா முகவர் சங்கத் தலைவர் ஜிம்மி லியோங் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =