மலேசியா-சிங்கப்பூர் எல்லைப் பகுதி திறப்பு பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்

கோவிட் தொற்று ஏற்பட்ட கடந்த 2 ஆண்டுகளாக மலேசியா-சிங்கப்பூருக்கான எல்லைத் திறப்பை இரு நாடுகளின் வர்த்தகத் துறைகள் உட்படப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக மலேசிய டிஜிட்டல் வர்த்தக மன்றத் (டி.பி.டி.எம்.) தலைவர், கிறிஸ் டேனியல் வோங் தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளுக்கான எல்லைப் பகுதி வரும் 29ஆம் தேதி தொடங்கி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மிகவும் நீண்டக் காலம் காத்திருந்த காரணத்தால் இந்த மகிழ்ச்சியானச் செய்தியை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் திறக்கப்படுவதால் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை மட்டுமின்றிச் சுற்றுலாத் துறையையும் நாம் துரிதப்படுத்துவோம்.
எனினும், டிஜிட்டல் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பைப் பற்றிப் பேசும் போது மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள வர்த்தக நண்பர்களை நாம் பார்க்க முடிகிறது என்றால் இத்தகவலை நாம் நன்முறையில் வரவேற்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கிறிஸ் டேனியல் வோங் குறிப்பிட்டார்.
ஞநஅரெமயயn யீiவேர ளநஅயீயனயn: சுயnஉயமமயn யீநசவரஅரொயn நமடிnடிஅi, ரெமய சரயபே யீநடயரெச யளiபே மந ஆயடயலளயை (ஹளவசடி ஹறயni)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 3 =