மலேசியா, சிங்கப்பூர் இடையிலான தரை மற்றும் விமானப் பயணத்தை முழுமையாக தொடங்க இணக்கம்

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட தனிநபர்களுக்கு உடனடியாக தரை மற்றும் வான்வழி பயணங்களைத் திறப்பதற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளன.
இன்று புத்ராஜெயாவில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் இடையே நடைபெற்ற சந்திப்பில் அதற்கு இணக்கம் காணப்பட்டது.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தற்போது கட்டுப்பாட்டில் இருக்கும் கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அண்மைய நிலவரம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக கைரி தெரிவித்தார்.
அதன் பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியை முழுமையாக திறப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடத்தப்பட்ட பேராளர்கள் கூட்டத்திலும் இருவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =