மலேசியா ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

0

கோலாலம்பூர், அக். 31 – மலேசியா ஏர்லைன்ஸ் (எம்.ஏ.பி) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) ஆகியவை நேற்று பரந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு விமானக் குழுக்களுக்கிடையிலான நீண்டகால பங்காளித்துவத்தைக் கணிசமாக வலுப்படுத்தும்.
ஒரு கூட்டு அறிக்கையில், சம்பந்தப்பட்ட போட்டி அதிகாரிகளின் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, சிங்கப்பூர், மலேசியா இடையேயான விமானங்களில் வருவாயைப் பகிர்ந்து கொள்ளவும், குறியீடு-பங்கு வழிகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கூட்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவ்விரு தேசிய விமான நிறுவனங்களும் முன்மொழிகின்றன.
புதிய ஒப்பந்தத்தில் எஸ்.ஐ.ஏ.இன் துணை நிறுவனங்களான சில்க் ஏர், ஸ்கூட், எம்.ஏ.பி.இன் சகோதர விமான நிறுவனமான ஃபயர்பிளை ஆகியவை அடங்கும். புதிய வாடிக்கையாளர் சலுகைகள் மற்றும் புதிய வணிக வாய்ப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜூன் 2019இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இது பின்பற்றுகிறது.
சிங்கப்பூர், மலேசியா இடையேயான விமானங்கள் ஒரு கூட்டு வணிக ஏற்பாட்டின் கீழ் இயங்கும். எம்.ஏ.பி, எஸ்.ஐ.ஏ ஆகியவை பயணிகளின் வசதிக்காக வாடிக்கையாளர்களுக்கு அதிக விமானத் தேர்வுகள், பயணங்களை வழங்க அட்டவணைகளை ஒருங்கிணைக்க விரும்புகின்றன,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + three =