மலேசியா உங்களின் இரண்டாவது இல்லம்: திறந்த மடல்

அந்த வகையில் வில்லியம் மேன் என்பவர் கீழ்க்கண்டவாறு தமது அதிருப்தியை வெளிப்படுத்தி யுள்ளார். தாமும் தமது மனைவியும் பதவி ஓய்வு பெற்று இனிவரும் காலத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏதாவதொன்றில் கழிக்க விரும்பி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக அவர் தெரிவித்தார். இணையதளத்தின் வாயிலாக மலேசியாவில் அம்மாதிரியான வசதி இருப்பதாகவும், மலேசியா உங்கள் இல்லம் என்ற திட்டம் வெளிநாட்டினருக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளதை அறிந்து, 2016 ஆம் ஆண்டு குறுகியகால விடு முறையில் இங்கு வந்து தங்கியதாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர் மலேசியாவில் தங்கி இருக்க தாங்கள் இருவரும் விரும்பி, அதனை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். மலேசியாவின் தட்பவெப்ப நிலை, இங்கு பேசப்படும் ஆங்கிலம், இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு சுலமாகப் பயணம் மேற்கொள்ளும் வசதி, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்திட்டத்தைப் புதுப்பிக்கும் வாய்ப்பு, இருப்பதால்தான் தாமும் மனைவியும் 2020ஆம் ஆண்டு பினாங்கில் வந்து தங்கியதாக அவர் தெரிவித்தார். இங்கு வந்த பின்னர் மலேசியா வில் பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழ்வது தங்களுக்குப் பிரிடித்துப் போனதாகவும், மக்கள் நட்போடு பழகுவது தங்களை மிகவும் கவர்ந்த தாகவும், வெளிநாட்டின ராக இருந்தாலும், இங்குள்ள மக்கள் உதவிக்கு ஓடோடி வந்து உதவி புரிந்தது போன்றவை தங்களுக்குப் பிடித்துப் போனதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பினாங்கில் பலரும் பல உணவு வகைகளை தங்களுக்கு அறிமுகப் படுத்தியதாகமும் அதில் நாசி டாகாங், ஈக்கான் பக்கார், சிக்கன் மசாலா, டுரியான் கம்போங், ரோஜாக் ஆகியவை தங்களுக்கு பிடித்தமான உணவாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இங்கு கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்கள், முக்கிய நிகழ்ச்சி களைத் தாங்கள் பட்டியலிட்டு, அதில் கலந்து கொள்வதில் பெருமை கொண்டதாகவும் அவர் கள் தெரிவித்தனர். மேலும், அரசு பல்லின மக்களின் கலாச்சாரத்தைப் பேணுவதும் அவர் களுக்கு விருப்பமான சமயங்களை அனுபவிப்பதற்கும் அரசு அனுமதித்த கொள்கையானது தங்களை மிகவும் கவர்ந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின் றனர். இந்தக் காலத்தில் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு வழக்கப் படுத்திக் கொண்டதாகவும் அவர் கள் தெரிவித்தனர். இங்குள்ள மக்களின் திருமண நிகழ்ச்சிகளிலும் இறப்பு காரியங்களிலும் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாங்கள் மலாய், மாண்டரின் மொழிகளை சற்று பேசக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர் அதே போன்று, பெரியவர்களிடம் சலாம் பாச்சி, சலாம் மாச்சி என்ற வார்த்தைகளைப் பயன் படுத்துவதாகவும் தமிழ் மொழியில் நன்றி என்ற வார்த்தையையும் தாங்கள் கற்றுக் கொண்டதாகவும், இங்கு நாசி கண்டார், நாசி லெமாக், பிரியாணி போன்ற உணவு களை விரும்பி உண்பதாகும் தெரிவித்தனர். இங்கு இருக்கும் தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு நிதி சேர்க்கவும் கோவிட் காலத்தில் நிறைவான சேவையை வழங்கிய போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டதோடு இங்குள்ள கவர்னரின் விருந்துபசரிப்பி லும் தாங்கள் கலந்துகொண்டு கொண் டது பெருமையை அளிப்பதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து இங்கு வசிக்கும் எங்கள் மாதிரியான வெளிநாட்டினர், விசா வைத்திருப்போருக்கான விதிமுறைகள் மாற்றப்படுவதை அறிந்து, தாங்கள் கவலை கொள்வதாகவும் தெரிவித்தனர். இதற்கு முன்னர், மாதாந்திர செலவுக்காக வெளிநாட்டிலிருந்து மாதம் ஒன்றுக்கு 10,000 ரிங்கிட் கொண்டு வரவேண்டும் என்று விதிக்கப்பட்ட விதிமுறை, இப்போது மாதத்திற்கு 40,000 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து தங்கி இருப்பதற்கு வைப்புத் தொகையாக 150,0 00 முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி இப்போது, ஒரு மில்லியன் ரிங்கிட்டை நீண்டகால வைப்பு நிதியாக வைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறது. இந்நிலையில், இங்கு தங்கியிருக்கும் தாங்கள் உட்பட 90லிருந்து 95 விழுக்காட்டினர் இந்தப் புதிய விதிமுறையைப் பின்பற்ற முடியாத நிலையில் இருப்ப தாகவும் தங்களின் விசா காலம் முடிந்த பின்னர், மலேசியாவில் இனிமேலும் தங்கியிருப்பது முடியாத நிலை என்று கருதுவதாகவும் அவர் கள் தெரிவித்தனர். இங்கு தங்கியிருக்க அனுமதி அளித்த மலேசிய அரசுக்கு தாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், காலத்திற்கு ஏற்ப அவர்களின் விதிமுறை சரிதான் என்றும், ஆனால் அதனைத் தங்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தாங்கள் இனி மேலும் இங்கு இருப்பது முடியாத காரியமாகத் தோன்றுவதாக அவர் கள் தெரிவித்தனர். எனினும், அந்த விதிமுறை புதிதாக இங்கு வந்து தங்கும் வெளி நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால், இங்கு பல காலமாகத் தங்கியிருக்கும் தங்களைப் போன் றோருக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அது தங்களை இன் நாட்டிலிருந்து விரட்டும் தன்மையைக் கொண்டிருப்பதாக அவர்கள் வருத்தத்தோடு தெரி வித்தனர். இந்நிலையில், உள்துறை அமைச்சகம் எங்களின் நிலையை பரிவோடு பரிசீலித்து, புதிய விதிமுறையை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். நாங்கள் மலேசியாவில் தங்கியிருந்து இங்குள்ள பல்லின கலாச்சாரத்தை வழக்க மாகப் பின்பற்றி இருக்கவே விரும்புவதாகவும், அதற்கு ஆண்டவன் துணை புரிய வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 2 =