மலேசியா அணி 1-1 என்ற கோல் கணக்கில் மியான்மாருடன் சமநிலை

0

சீ விளையாட்டு போட்டியில் மலேசிய காற்பந்து அணி இன்று நடைப்பெற்ற ஏ பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில் 1-1 என்ற கோல்கணக்கில்  மியான்மாருடன் சமநிலை கண்டது. இந்த ஆட்டம் தொடங்கிய 13ஆவது நிமிடத்திலேயே மியன்மார் ஒரு கோலை அடித்து மலேசிய குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த ஆட்டத்தை மியன்மார் குழுவினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர்.எனினும் தொடர்ந்து தாக்குதல் நடத்திய மலேசியா குழுவினர்  24ஆவது நிமிடத்தில் ஹடி ஃபையட் ரசாக் மூலம் ஒரு  கோலை அடித்து நிலைமையை 1-1 என்றாக்கினர். அதன் பிறகு, இரண்டு அணிகளுமே தற்காப்பில் கவனம் செலுத்தியதால் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

மலேசியா ஏ பிரிவில் தனது அடுத்த ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் குழுவுடன் வெள்ளிக்கிழமையன்று மோதவிருக்கிறது. இதனிடையே, இன்று நடைப்பெற்ற பி பிரிவுக்கான ஆட்டத்தில் வியட்நாம் 6-0 என்ற கோல் கணக்கில் புருனையை வீழ்த்தியது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here