மலேசியாவுடனான உறவு வலுவாக இருக்க வேண்டும்

மலேசியாவின் நிலைத்தன்மையும் வளமும் சிங்கப்பூர் மற்றும் தெற்காசிய வட்டாரத்திற்கு மிக தேவையானதாகும். மலேசியாவின் மேம்பாட்டை சிங்கப்பூர் உன்னிப்பாக கவனித்து வருவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார். இரு நாடுகளுக்குமான உறவு என்றும் நெருக்கமாக இருந்து வருகிறது, தொடர்ந்து இருந்து வரும். மலேசியாவுடனான ஒத்துழைப்பு இருப்பதை சிங்கப்பூர் என்றும் உடன்பட்டு உள்ளது என நாடாளுமன்ற கேள்விக்கு பதில் பேசிய போது பாலகிருஷ்ணன் அதனை தெரிவித்தார். கோவிட்-19 தோற்று பாதிப்பில் இருநாடுகளும் மீட்சி பெற்று வலுவுடன் இருப்பது மிக அவசியம் என அவர் கூறினார். இரு நாட்டின் குடி மக்களின் நலனுக்கு இருநாடுகளின் நல்லுறவு முக்கியமாக இருக்கிறது. புதியதாக பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஒத்துழைப்பு வழங்குவதை உறுதி செய்துள்ளதாக பாலகிருஷ்ணன் கூறினார். புதிய பிரதமரை ஆண்டு தொடக்கத்தில் சந்தித்துள்ளேன். ஏற்கெனவே நாங்கள் இருவரும் இளைஞர் விளையாட்டுத் தறை அமைச்சராக இருந்தபோது இருவரின் இடையில் தொடர்பும் உறவும் இருந்ததாக பாலகிருஷ்ணன் கூறினார். இரு நாடுகளுக்கிடையே அதன் மக்கள் எல்லை கடக்கும் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ஒரு சுமுகமான முடிவு ஏற்படும். இரு நாட்டு மக்களிடையே தொடர்ந்து நாட்டில் நுழையவும் அது வழிவகுக்கும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + fifteen =