மலேசியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் 10 வகையான புற்றுநோய்கள் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், பிறப்புறுப்பில் ஏற்படும் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவை கடந்த காலங்களைக் காட்டிலும் பன்மடங்காக உயர்ந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் 115,238 புற்றுநோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007 தொடங்கி 2011 ஆம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கை 103,507ஆகக் குறைந்திருந்ததையும் அவர் கோடிகாட்டினார்.

இந்த எண்ணிக்கை உயர்வின்படி பார்க்கையில் 1 லட்சம் ஆண்களுக்கு 86 சம்பவங்களும் 1 லட்சம் பெண்களுக்கு 102 சம்பவங்களும் ஆண்டுக்கு பதிவாகியுள்ளன. இந்த அனைத்து விவரங்களையும் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு தேசிய புற்றுநோய் கழகம் பேராதரவு நல்கியிருந்தது.

மலேசியாவைப் பொறுத்தவரை இரண்டாவது மிகப் பெரிய உயிர்கொல்லி நோயாக புற்றுநோய் கருதப்படுகின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் 96 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டிருந்த வேளையில், அதில் மலேசியாவைச் சேர்ந்த 16,000 பேர் மரணமடைந்திருப்பது மிகப் பெரிய எண்ணிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக ஒருவருக்கு தொடக்கக் கட்டத்தில் புற்றுநோய் கண்டிருந்தால் அது குறித்த அறிகுறிகளை உடனே தெரிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்துக்கு வரும்போது மட்டுமே அதை அவர்களால் அறிய முடியும். எனவே கூடுமானவரை 6 மாத காலத்திற்கு ஒரு முறை பொதுமக்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்த் பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =