மலேசியாவிலே எங்கள் தாய்மொழி தமிழ் என்றும் நிலைத்து நிற்கும்

திருக்குறள் என்பது வாழ்வியல் மறையாகும். பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் என்ன மாதிரியான நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இரண்டடி திருக்குறளில் அழகாகவும் சுருக்கமாகவும் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தமதுரையில் குறிப்பிட்டார்.
தமிழகத்திலே தாய்மொழி அழிந்து கொண்டிருக்கிறது என்று வேலூர் பல்கலைக்கழகத் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தமதுரையிலே குறிப்பிட்டார். அவரிடம் ஒரு விஷயத்தை அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக கூறிய காமாட்சி மலேசியாவில் தமிழ் மொழி ஒருபோதும் சரிவை எதிர்நோக்காது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
இந்நாட்டிலே தமிழ்மொழி, கலாசாரம் ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கிருப்பவர்கள்தான் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.


2 சீனர்கள் சந்தித்தால் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் 2 தமிழர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் உரையாடுவதைத்தான் பெருமையாக நினைக்கிறார்கள். இது நம்முடைய தமிழர்களின் பிரச்சினை.
இருந்தாலும் இந்நாட்டிலே தமிழ் வாழும், நிலைத்து நிற்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த திருக்குறள் இசை நாட்டிய நாடக விழாவில் படைப்பு வழங்கிய நடனமணிகள் அனைவரும் தங்கள் கலைநயத்தாலும் முகபாவத்தாலும் அரங்கத்தையே கட்டிப்போட்டு வைத்தனர். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக காமாட்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =