மலேசியாவிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 31,600ஆக உயர்ந்தது

0

இவ்வருடம் மலேசியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம் யாத்திரீகர்களின் எண்ணிக்கை 31,600ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் 30,200 யாத்திரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்று பிரதமர் துறையமைச்சர் டத்தோ ஸ்ரீ முஜாஹிட் யூசோப் ராவா நேற்று கூறினார்.மற்றும் யாத்திரீகர் வாரியத்தின் (தபோங் ஹாஜி) வழி மலேசியாவும் நடத்திய விவாதத்தின் மூலம் மேலும் 1,400 யாத்திரீகர்களுக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இது மலேசியாவின் மக்கள் தொகை 31.6 மில்லியனை எட்டியதைப் பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார். 2017 இல் மலேசியாவின் மக்கள் தொகை 31.6 மில்லியன் என்று ஐக்கிய நாட்டு சபை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஒ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம், ஒரு நாட்டின் மக்கள் தொகையின் 0.01 சதவீத நபர்களுக்கு ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்திருக்கிறது.
இந்த அடிப்படையில் நமது நாட்டின் மக்கள் தொகை அதி
கரிப்பை பற்றி நாங்கள் சவுதி அரசாங்கத்திடம் அறிவித்திருந் தோம். இதன் காரணமாக மலேசியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது என்று அவர் நிருபர்களிடம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கூறினார்.
சவூதி அரேபியாவிற்கு 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் முஜாஹிட் நேற்று நாடு திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here