மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி

அடுத்தாண்டு 64 லட்சம் மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று மக்களவையில் அறிவித்தார்.இதன் முதற்கட்ட கோவிட்-19 தடுப்பூசி பரீட்சார்த்த சோதனை அடுத்த மாதம் தொடங்கப்படும் என அவர் சொன்னார்.சீனாவுடன், அரசாங்கங்களு க்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பரீட்சார்த்த சோதனை நடத்தப்படும் என்றார் அவர்.

அனைத்து மலேசியர்களுக் கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்க கடந்த நவம்பர் 24ஆம் தேதி சீன அரசாங்கத் துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க 300 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here