மலேசியப் பிரஜைகளைத் திருமணம் புரிந்த வெளிநாட்டு கணவன் – மனைவி நாடு திரும்பலாம்

மலேசியப் பிரஜைகளைத் திருமணம் புரிந்திருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த கணவன் – மனைவி நாடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
இவர்கள் முறையாக நாடு திரும்புவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஸைமி தெரிவித்தார்.
மேலும் இவர்களின் பிள்ளைகளும் நாடு திரும்புவதற்கு முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மலேசியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணத்தினால் மலேசியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டிருப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
கட்டுப்பாடு அகற்றப்பட்ட பின்னரே அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
தற்போது முதல் கட்டமாக மலேசியப் பிரஜைகளை திருமணம் புரிந்திருக்கும் கணவன் – மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் நாட்டிற்குள் நுழைய விண்ணப்பிக்க வேண்டும்.
இவர்கள் மலேசியர்களை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =