‘மலேசியக் குடும்பம்’ வார்த்தை சமூக மதிப்பை உயர்த்துகிறதா?

கடந்த 12 வது பொருளாதார ஒதுக்கீடு திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி என்பது நாடளுமன்ற இந்திய உறுப்பினர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியாகும் சுங்கை சிப்புட் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் தெரிவித்தார். நேற்று முன்தினம் இங்கு நடைபெற்ற திருமண நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டார். அந்த நிகழ்வுக்குப் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டு மக்களிடையே இனம், மொழி, மதம் என்ற வேறுபாடு இருந்தாலும், அனைவரும் மலேசியர்கள் என்ற ஒருமைப்பாட்டினை பின்பற்றியே வாழ்கின்றனர். மலேசியர்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில், நிதி ஒதுக்கீட்டில் இந்திய சமூகத்திற்கு பெரிய வித்தியாசத்தை முன்வைத்துள்ளது அர்த்தமற்ற செயலாகும் என கேசவன் குற்றம் சாட்டியுள்ளார். மே 1969 க்கு பிறகு நாட்டில் தேசிய கோட்பாடான ருக்குன் நெகரா தோற்றுவிக்கப்பட்டது. காரணம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை செழித்து வளர வேண்டியது முக்கியம் என அன்றைய பிரதமரான காலம் சென்ற துன் ரசாக் அவர்கள் இந்த கோட்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு குடிமகனும் நாட்டுக்கும் மாமன்னருக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது முக்கியக் கருவாகும் என கேசவன் குறிப்பிட்டார். மேலும், ருக்குன் நெகாரா கோட்பாட்டின் மூலமாக நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும் என்றுதான் முன்னெடுக்கப்பட்ட நாள் முதல், மலேசியாவின் பல்லின சமூக ஒற்றுமைக் குறித்து உலக நாடுகள் மத்தியில் புகழப்பட்டது என்பது வரலாற்றுப் பூரவமானது என்றார் அவர். அந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒரு சமூகத்தை பின்னடையச் செய்யாது என்பது உத்தரவாதமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அன்றும் இன்றும் இந்திய சமூகம் தன்முனைப்பினை காட்டியே வருகின்றனர். ஆனால், நிதி ஒதுக்கீட்டில் மட்டும் அந்த 10 கோடி வெள்ளி கோட்டினை தாண்டவில்லை. சமூகத்தின் பங்கு அவசியமில்லை என்பது போன்று தோற்றம் இதில் காட்டுகிறது என்றும் கேசவன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வேதனை அடைந்துள்ள சமூகம் தங்களுக்கு அரசிடமிருந்து அன்பளிப்பு அவசியமற்றது. அந்த சூழ்நிலையில், அவர்களுடைய உரிமைக்கு அரசு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்றுதான் நாங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் என கேசவன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் உண்மையான செலவு என்பது அரசுக்கு தான், தெரியும். வேறு யாருக்குத் தெரியும்? அவசரமாக எடுக்கப்பட்ட சில மேம்பாட்டு திட்டங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, செலவான தொகை மக்களை பிரமிக்க வைக்கிறது. சமூகப் பொறுப்பிற்கான நிதியை வீணடிக்க நேரிடும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அரசு செய்யும் துணிவான முயற்சிகளுக்கு அடியில் இருக்கும் சில நோக்கங்களுள் தங்களது தனிப்பட்ட கட்சியின் அங்கீகாரம் பெறும் உள்நோக்கம் இருக்கிறதா? என்பது தமக்கு தெரியவில்லை. அதனால் ஏற்படும் அரசின் தோல்விகளை நாட்டு மக்களின் மனங்களிலிருந்து அகற்றிட முடியாது என்பது பல நீதிமன்ற வழக்குகள் உணர்த்தும் பாடமாகும் என்று ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கேசவன் விவரித்தார். அந்த நிலையில், மலேசிய குடும்பம் என்பது மக்கள் தங்கள் சமூக மதிப்பை உணர மிகவும் அவசியமானது. ஆனால், அந்த வார்த்தையில் அனைத்து மக்களின் வாழ்வாதார வளர்ச்சியை உள்ளடக்கமாக வைக்க பிரதமர் இஸ்மாயில் விரும்புகின்றாரா? அல்லது பிளவுவாத அரசியலை மறைப்பதற்கான அரசியல் வார்த்தை ஜாலாமா? என்றும் தெரியவில்லை என கேசவன் வினவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =