மலாய் கௌரவ மாநாடு இதர இனங்களைச் சாடும் மாநாடாக அமைந்துவிட்டது

0

நேற்று முன்தினம் நடந்த மலாய் கௌரவ மாநாடு இதர இனங்களை கடுமையாகச் சாடும் மாநாடாக அமைந்துவிட்டதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி கூறினார்.
நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்தும், மலாய் அரசியல்வாதிகள் இனம் – மதத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவோம் என்ற மனப்போக்கை இன்னும் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அம்னோ – பாஸ் கூட்டணி கூட இந்த மலாய் கௌரவ மாநாட்டை விட அவ்வளவு இனவாதமாக இருந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாடு மலாய்க்காரர்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் ஒரு நிகழ்வு என்று நான் கருதியிருந்தேன். ஆனால் இதர இனத்தவர்களைச் சிறுமைப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தருகிறது” என்றார் அவர். மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் சீனர்க ளுக்கும் இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்கள் எதிரிகள் அல்லர்.
இதர சமூகங்களைச் சாடுவது மலாய்க்காரர்களுக்கும் நாட்டிற்கும் ஏற்புடையதாக இருக்காது என அவர் நினைவுறுத்தினார்.
இந்த நாடு மலாய்க்காரர் களுக்குச் சொந்தமானது. முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பிட்ட வரையறையைத் தாண்டக்கூடாது போன்ற உரைகள் இதர சமூகத்தைப் புண்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − five =