மலாய்மொழிப் பயன்பாடு மேலும் வலுப்படுத்தப்படும்

நாட்டில் மலாய் மொழி பயன்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கும் அனைத்துலக அரங்கில் தேசிய மொழியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் அமல்படுத்தப்படவிருக்கும் முன்முயற்சித் திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வெளியிட்டார்.
எனக்குத் தெரிந்த வரையில், வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மலாய் மொழியைப் பயன்படுத்த அமைச்சர்கள் எவருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஆகவே, வெளிநாடுகளில் மாநாடுகளிலும் இருவழிச் சந்திப்புகளிலும் கலந்து கொள்ளும் நமது அமைச்சர்கள் அனைவரையும் மலாய் மொழியைப் பயன்படுத்தும்படி பணித்துள்ளேன் என்று மேலவையில் பிரதமர் தெரிவித்தார்.
இருந்த போதிலும், இது குறித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள நமது தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே மலாய்மொழி பயன்பாடு முறைமைப்படுத்தப்படுமா என்று மேலவை உறுப்பினர் ஸூராய்னா மூசா கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இஸ்மாயில், அந்த விவகாரம் குறித்து அவர்களிடம் விவாதிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 12 =