மலாய்க்காரர்களை ஜசெக அழித்துவிட முடியாது

முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் ஒரு புத்திசாலி என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் வர்ணித்தார். ஆனால் அவரும் அவருடைய ஜசெக கட்சியும் மலாய்க்காரர்களை அழித்துவிட முடியாது என்றார் அவர்.
ஜசெக ஆட்சியில் இருந்தால் மலாய்க்காரர்களை அழித்து விடும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டார். ‘ஆமாம், லிம் குவான் எங் புத்தி சாலி, எங்களின் அனுமதியின்றி அவரால் ஒன்றும் செய்துவிட முடியாது’ என லங்காவி நாடாளு மன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ஜசெகவில் இருந்தது 6 அமைச்சர்கள் மட்டும் தான். பக்காத்தான் ஹராப்பானில் இருந்த மற்ற 22 அமைச்சர்கள் இந்த 6 அமைச்சர்களிடம் அடி பணிந்து விட முடியாது என மகாதீர் தெரிவித்தார். ஆகையால் மலாய்க்காரர் களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் நஜிப் பேசி வருவதாக அவர் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 12 =