மலாக்கா முதல்வராக டத்தோ ஸ்ரீ சுலைமான் அலி சனிக்கிழமை நள்ளிரவில் பதவியேற்றார்

மலாக்கா மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நான்கு மணி நேரத்தில் மாநில முதலமைச்சராக டத்தோஸ்ரீ சுலைமான் அலி பதவியேற்றார். மாநில தேர்தலில் தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் அவசரமாக பதவியேற்றார். நேற்று முன் தினம் இரவு 12.58க்கு ஆளுநர் துன் முகமது அலி ருஸ்டாம் முன்னிலையில் பதவியேற்றார். மாநிலத்தில் 13வது முதல்வராக பதவியேற்ற இவரின் பதவி ஏற்பு நிகழ்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமாட் சைட் ஹாமிடி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். 55 வயதான சுலைமான் லெண்டு சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஏன் இந்த நள்ளிரவில் பதவி ஏற்பு என்று கேட்டதற்கு, தனக்கு அதிகமான பணிகள் இருப்பதாலும், மேலும் செவ்வாய்க்கிழமை மாநில மந்திரி பெசார் கூட்டம் இருப்பதாலும், ஏனைய பணிகள் இருப்பதாலும் தான் இந்த முடிவை செய்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − four =