மலாக்கா மாநில மஇகா வேட்பாளரை தேசியத் தலைவரே முடிவு செய்வார்

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்), போட்டியிட வேண்டிய தொகுதிகள் மற்றும் அதன் வேட்பாளர் யார் என்று மஇகா தேசியத் தலைவர் முடிவு செய்வார் என மாநில மஇகா தலைவர் டத்தோ எம்.எஸ். மகாதேவன் கூறினார். மேலும் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வாக்காளர்களை அடையாளம் காண கட்சியின் கிளைத் தலைவருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மஇகா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதிகள் குறித்த முடிவு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் விவாதங்களுக்குப் பிறகு மஇகாவின் தேசியத் தலைவரின் முடிவுக்கு மலாக்கா மாநில மஇகா கட்சி தலை வணங்கும் என்று மகாதேவன் கூறினார். போட்டியிடும் தொகுதிகள் அல்லது வேட்பாளர்களைப் பொறுத்தவரை, நாங்கள் அதை மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் மற்றும் தேசிய முன்னணிக் கட்சி (பிஎன்) தலைமையின் முடிவுக்கு விட்டுவிடுவோம். மேல் மட்டத்தில் விவாதங்கள் இருக்கலாம், இருப்பினும் எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் அதை தலைமைத்துவத்துக்கு விட்டுவிடுவ தாக அவர் கூறினார். மாநில மஇகா தலைவராக, உயர் அதிகாரிகள் எடுக்கும் எந்த முடிவையும் பின்பற்றுவதாக அவரை தொடர்பு கொண்டபோது கூறினார். கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படவில்லை, ஏனெனில் கட்சித் தலைவரின் முடிவுக்காக இன்னும் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். யார் வேட்பாளர் என்று தெரியவில்லை இருப்பினும் ஏழு (மஇகா வேட்பாளர்கள்) ஆர்வமாக உள்ளனர். போட்டியிடும் வேட்பாளரின் பெயர் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் கட்சியின் உயர்மட்டத்தினால் தீர்மானிக்கப்படும். மகாதேவன் சட்டமன்றத் தேர்தலை நடத்த அரசு முடிவு செய்தாலும் அல்லது அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினாலும் மஇகா எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 17 =