மலாக்கா தேர்தல் தோல்விக்கு எb அன்வாரை பலிகடா ஆக்குவதா?

அண்மையில் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி கண்டதற்கு அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பலிகடா ஆக்க வேண்டாம் என்று ஜசெகவின் ஏற்பாட்டுச் செயலாளர் அந்தோணி லோக்கை இரண்டு அமைப்புகள் கண்டனம் செய்துள்ளன. பக்காத்தான் ஹராப்பானின் தோல்விக்கு அன்வாரை பலிகடா ஆக்குவதை விடுத்து அத்தோல்விக்கு உண்மையான காரணத்தை ஆராய வேண்டும் என்று ‘ஒதாய் ரிஃபோர்மிஸ்’ அமைப்பின் செயலாளர் அப்துல் ரசாக் இஸ்மாயில் தெரிவித்தார். எஸ்ஓபி வழிகாட்டு நெறிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டிருந்த காரணத்தால் மக்கள் சந்திப்புகள் மற்றும் வீட்டுக்கு வீடு சென்று வாக்குத் திரட்டுவது போன்ற நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் பக்காத்தான் ஹராப்பானின் முழுஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போனது. எனவே, மலாக்கா சட்டமன்றத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கு முற்றிலும் ஒரு புதிய களமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். அன்வாருக்குப் பதில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வேறு ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் எனும் அந்தோணி லோக்கின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். அவருக்கு இணையான ஆற்றல் கொண்ட வேறு தலைவர்கள் எவரும் இதுவரை தென்படவில்லை என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரசாக் கூறினார். இதனிடையே, அன்வாருக்குப் பதில் மற்றொருவரை பக்காத்தானின் தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்தோணி லோக்கை காபோங்கான் பெர்திண்டாக் மெமோரண்டம் ரக்யாட் மலேசியா’ எனும் அமைப்பும் கண்டனம் செய்துள்ளது. அந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அது குறித்து பக்காத்தான் தலைவர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் முஸ்தபா மன்சூர் குறிப்பிட்டார். அச்சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட இருபது விழுக்காட்டினர் வாக்களிக்க வரவில்லை. மேலும் கூடுதலானோர் வாக்களிக்க வந்திருந்தால், தேசிய முன்னணிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் பக்காத்தான் ஹராப்பான் கடுமையான போட்டியைக் கொடுத்திருக்கும் என்று அவர் சொன்னார். அவ்விரு அமைப்புகளும் அன்வாருக்கு ஆதரவான அமைப்புகள் ™ஆகும். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அன்வாரைப் பிரதமராக்க வேண்டும் என்பது குறித்து பேசுவதை விட்டுவிட்டு தனது சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து அதிகம் பேசவேண்டும் என்று அந்தோணி லோக்கை மேற்கோள்காட்டிஇணையப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − two =