மலாக்கா டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர் பள்ளி கடும் மழை யாலும் பெரு வெள்ளத்தாலும் அளவிட முடியாத பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்தித்துள்ளது. பொருள்சேதம் பெரிய அளவு ஏற்பட்டு பள்ளித் தளவாடங்கள் மற்றும் அடிப்படை பொருள்கள் சேதமாகி உள்ளன.
இந்த சேதங்களை ஈடுகட்டும் வகையில் பள்ளிப்பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொது மக்க ளின் உதவியை நாடவுள்ளது. நேற்று பள்ளி நிர்வாகம், பெற் றோர்கள், ஆசிரியர்கள், தீயணைப்புப் படையினர், பொது இயக்கங்கள், பொதுநலவாதிகள், பொதுச்சேவையாளர்கள், முன்னாள் மாணவர்கள், பெற் றோர்கள் ஆசிரியர் சங்கம் மற்றும் பலரும் பள்ளியை துப்புரவுப்படுத்த பெரும் உதவி புரிந்தனர். முற்றாக பள்ளி அறைகள், அலுவலகம், கணினிகள், மாண வர்கள் பயன்படுத்தக்கூடிய பாட தளவாடப் பொருள்கள் உட்பட அனைத்தும் சேதமுற்று விட்டன. எந்தவொரு பொருளும் பயன் படுத்த இயலாது. பெரிய அளவில் பொருள்சேதங்கள் அடைந்துள்ளது வேதனைக் குரியதாக உள்ளது என தலைமையாசிரியர் மன வருத்தத்துடன் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பள்ளி தொடங்குவதற்குள் பள்ளியை முழுமையாக சீரமைத்து தேவை யான பாட உபகரணங்களை வாங்க வேண்டியுள்ளது. அரசாங்கத்திலிருந்து கல்வி அதிகாரிகள் நேரடியாக வருகை புரிந்து பார்வையிட்டனர். முறை யாக தேவைப்படும் பொருள் மற்றும் பண செலவுகளுக்கான கணக்கறிக்கைகளை தயார் செய்து கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கூறிச் சென்றனர். இருப்பினும் அதிக மான பொருள்சேதத்தால் நிறைய பொருள்கள் மாணவர்கள் கல்வி போதனைகளுக்கு தேவைப் படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன்பே தயார் படுத்த வேண்டியுள்ளது என்ற னர் ஆசிரியர்கள். பள்ளி மீண்டும் தூய்மையாக முழுமையான நிலையில் தொடங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் சிரமமின்றி பாட போதனைகளை நடத்த அவர் களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டியது எங்க ளின் பொறுப்பும் கூட என்றனர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். சந்துரு மற்றும் துணைத் தலைவர் ஆர். கலா தேவி. பள்ளியின் நலன் கருதி பொதுமக்களின் உதவியையும் நாங்கள் நாடவுள்ளோம். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பதற்கேற்ப தமிழ் மக்களின் உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ எதிர்பார்க்கிறோம். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க வங்கி எண்ணை குறிப்பிட்டுள்ளோம். அல்லது நேரடியாகவே வழங்கி உதவலாம் என்றார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். சந்துரு. மேலும் விவரங்களுக்கு 012-6106589 அல்லது 012-9150373 ஆர். கலாவுடனும் தொடர்பு கொள்ளலாம்.