நாட்டில் பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மலாக்காவிலும் வெள்ளம் மோசமாக உள்ளது.
கடந்த சில தினங்களாக மலாக்காவில் பெய்து வரும் கனத்த மழையால் மலாக்கா காடேக் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுங்கை கட்டில், டுரியான் துங்கால் பகுதிகளிலும் வெள்ளம் படுமோசமாக உள்ளது. இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் ஏறியுள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங் களில் தற்போது 502 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், மலாக்கா அரசாங்கம், பாதுகாப்புப் படையினர் உட்பட பலரும் உதவி புரிந்து வருகிறார்கள்.