மற்ற நாடுகளுக்குப் புறம்பாக அரசு செயல்படுகிறது

0

சிகையலங்கார, முடி வெட்டும் நிலையங்கள் செயல்
பட அனுமதியளிக்கும் அரசின் அனுமதியானது சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்தாலோசிக் காமல் எடுக்கப்பட்ட முடிவு என லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அனுமதியைப் பொதுமக்களோடு சேர்ந்து, அதன் மூலம் பயன்பெறும் தரப்பினரும் எதிர்த்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
சிகையலங்கார நிலையம், முடிவெட்டும் கடை, சலவை நிலையங்கள், வழக்கறிஞர் நிறுவனங்கள், மின்சாதண மையங்கள், வான்வெளி சம்பந்தமான தொழில்துறை, சில கட்டுமான நிறுவனங்கள் முதலியவை செயல்படலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துலக வர்த்தகம், தொழில்துறை அமைச்சு (மித்தி) அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பானது தெளிவாக இல்லையென்று சில தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், சிகையலங்காரம், முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்ட வர்களே அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது தொழிலில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது இயலாத காரியம் என்பதால், அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மலேசிய சிகையலங்காரச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மக்களைப் பாதிக்கும் எந்த முடிவையும் அரசு சம்பந்தப்பட்ட தரப்பாருடன் கலந்தாலோசிக்க வேண்டுமென லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.
மேலும், கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தவும், அதன் பின்னர் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கலந்தாய்வு நடத்த நாடாளுமன்றத்தை விரைவாக அரசு கூட்ட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.மலேசியாவில் மட்டுமே நாடாளுமன்றம் கூட்டப்படாமல், அரசு தனது போக்கில் நடந்து கொண்டு வருவதோடு, நாடாளுமன்ற அனுமதியின்றி கோடிகணக்கான நிதியைச் செலவிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =