மற்ற சமயங்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் மத போதகரைக் கைது செய்யுங்கள்

    மத போதகர் ஷாக்கிர் நசோஹா தொடர்ந்து மற்ற மதங்களைச் சாடி வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும், அவருக்குத் தக்க பாடம் புகட்ட அவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலகளாவிய மனித உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவர் மீது விசாரணை நடந்து வருவதால், அவரைத் தாக்கி அறிக்கை எதனையும் வெளியிட வேண்டாமென போலீசார் அறிவுறுத்திய பின்னரும், அண்மையில், இரு நாள்களுக்கு முன்னர் அந்த போதகர் அதனைப் பொருட்படுத்தால் தொடர்ந்து வீடியோ பதிவுகளை வெளியிட்டு நாட்டின் அமைதிக்கும் பொது பாதுக்காப்புக்கும் பாதகத்தை விளைவித்து வருவதாக மேற்கண்ட அமைப்பின் தலைவர் எஸ். சசிகுமார் சுட்டிக் காட்டினார். நேற்று அவரின் கீழ் 100க்கும் அதிகமான பல்லின, பல கலாசார பின்னணியைச் சேர்ந்தோர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் அது சம்பந்தமான மகஜரைத் தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போது, மத போதகரை எதிர்த்து நாடு முழுமையிலும் 1,000க்கும் அதிகமான போலீஸ் புகாரை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் தொடர்ந்து நல்லிணக்கம் நிலவ சம்பந்தப்பட்ட ஷாக்கிர் நசோஹா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − thirteen =