மற்றவர்களை பார்த்து திருடன் என்கிறார் ; இவரின் பிள்ளைகள் கோடீஸ்வரர்கள்…!

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றவர் களை பார்த்து திருடன் என்கிறார். ஆனால் இவரின் பிள்ளைகள்தான் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
துன் டாக்டர் மகாதீர் காலையிலேயே வம்பைத் தொடங்கி விட்டார். மற்றவர்களைப் பார்த்து திருடன் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவரின் பிள்ளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
அனைவரும் கோடீஸ்வரர் களாக இருக்கிறார்கள் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் சரமாரியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
பேரப்பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே ஜெட்டில் பயணமாகிறார்கள் என்று டத்தோஸ்ரீ நஜிப் சுட்டிக் காட்டியுள்ளார். திருடர்கள் எல்லாம்
இன்று தலைவர்களாக இருக்கிறார் கள் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று தனது பேஸ்புக்கில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
திருடர்கள் எல்லாம் மாறிவிட் டார்கள். இப்போது நமக்கு எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர் தலைவர் என்பதால் திருடர்களையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நம் தலைவர் திருடர் என்றால் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. காரணம் அவர் நமக்கு போஸ்.
இப்போது இது புதிய பாணியாகி விட்டது. பழைய பாணி என்றால் திருடர்கள் எல்லாம் தலைவர்களாக வர முடியாது என்று குறிப்பிட்ட துன்
டாக்டர் மகாதீர், எஸ்ஆர்சி எனப்
படும் பணபரிமாற்ற ஊழல் வழக்கில்
டத்தோஸ்ரீ நஜிப் விடுதலையானால் அடுத்து அவர் பிரதமர் பதவிக்கு
வர விரும்புவார் என்று குறிப்பிட் டுள்ளார். துன் டாக்டர் மகாதீரின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக் கும் டத்தோஸ்ரீ நஜிப், மற்றவர்களை திருடன் என்கிறார். ஆனால் இவரின் பிள்ளைகள் மட்டும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்று கிண்டலடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − ten =